சர்வதேச செவிலியர் தினம் (Nurses Day) - Theme, Reasons and History, Celebration

  சர்வதேச செவிலியர் தினம் (Nurses Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று (புளோரன்ஸ் நைட்டிங்கேலின் - Florence Nightingale பிறந்த ஆண்டு) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நாள். சமூகத்திற்கு செவிலியர்கள் செய்யும் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

international nurses day

1820 ஆம் ஆண்டு மே 12 அன்று, புளோரன்ஸ் நைட்டிங்கேல், உலகின் மிகவும் பிரபலமான செவிலியர் பிறந்தார். அவர் ஒரு ஆங்கில செவிலியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன நர்சிங்கின் முக்கிய தூண்களை நிறுவியவர் ஆவார்.

சர்வதேச செவிலியர் தின வரலாறு

Lady with the Lamp என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் நவீன நர்சிங்கின் நிறுவனர். கிரிமியன் (cremian) போரின்போது காயமடைந்த பிரிட்டிஷ் வீரர்களின் நர்சிங் பொறுப்பாளராக பணியைத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேல் தனது பெரும்பாலான நேரத்தை காயமடைந்தவர்களை கவனித்து ஆறுதலளித்தார். செவிலியர்களுக்கு முறையான பயிற்சியை ஏற்படுத்தியவர் இவர்தான். முதல் நர்சிங் பள்ளி - நைட்டிங்கேல் ஸ்கூல் ஆஃப் நர்சிங் - 1860 இல் லண்டனில் திறக்கப்பட்டது. மருத்துவச்சிகள் பயிற்சி பள்ளியை அமைப்பதன் பின்னணியில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஒரு முக்கிய நபராக இருந்தார். ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) 1907 விருது பெற்ற முதல் பெண் இவர்தான்.

Theme of the Year

2016 – Nurses: A Force for Change: Improving Health Systems' Resilience

2017 – Nurses: A Voice to Lead – Achieving the Sustainable Development Goals

2018 – Nurses: A Voice to Lead – Health is a Human right

2019 – Nurses: A Voice to Lead – Health for All

2020 – Nurses: A Voice to Lead – Nursing the World to Health

2021 - Nurses: A Voice to Lead - A Vision for Future Healthcare

Related Posts