List of Writing Apps (எழுதுவதற்கு சிறந்தவை ) Available For Windows and Mac | தமிழ்

ஒரு காலத்துல எழுதுவது என்பதே மிக அரிதாக இருந்தது. எழுத்தாளர் பலரும் typewriter முதல் பேணா காகிதம் வரை பயன்படுத்தினர். இப்பொழுது, தொழிலநுட்பம் வளர்ந்துள்ள இந்நாளில் பல அம்சங்கள் நிறைந்த பல software-கள் எழுதுவதற்கென்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இலக்கணம் தெரியாத எவரும் எழுத உதுவுகிறது இந்த வகை செயலிகள். Blogging போன்ற வேலைகளுக்கு இந்த செயலிகள் மிகவும் உதவும். இந்த பதிவில் என்னென்ன software-கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் ஒரு கத்துக்குட்டி என்றால் இந்த Software-கள் உங்களை மேம்படுத்தும். யாருக்கு தெரியும்? வருங்காலத்தில் பெரிய எழுத்தாளராக கூட ஆகலாம்.

writing apps

1. ProWriting Aid

பெரிய கட்டுரைகள் எழுதுவோருக்கு சிறந்த ஒன்றாகும். Grammarly ஐ போலவே இதிலும் இலக்கண திருத்தும் செய்ய அமைப்புகள் உண்டு. உங்களின் உரை எந்த அளவிற்க்கு படிக்க சிறந்தது என்பதை தெரிந்துகொள்ள இது உதவும். இதில் இருக்கும் அம்சங்கள்,

  • Grammer Checker
  • Spell Checker
  • Plagiarism Checker
  • Text Editor
  • Style Check

2. Grammarly

தொடக்க நிலை Bloggers-களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். சிறிய உரை எழுத மட்டும் வசதிகள் உள்ளது. மேலும், இலக்கணம் மற்றும் எழுத்து பிழை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவற்றுக்கான சரியான பதிலையும் பரிந்துரை செய்யும். தொலைபேசிக்கும் grammarly app இருக்கிறது. வாசகர் எந்த தோணியில் படிக்கவேண்டும் என்பதையும், அதற்க்கு ஏற்ற வார்தைகளையும் grammarly பரிந்துரைக்கும். பரிந்துரைக்கப்பட்ட வார்த்தைகளுக்கு காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும். இதன் அம்சங்கள்

  • Grammer Checker
  • Spell Checker
  • Plagiarism Checker
  • Customize setting to set tone
  • Explain suggested changes

3. Squibler

squibler

புத்தகம் எழுதுவோருக்கு தேவைப்படும் ஒன்று. Outline மற்றும் Index செய்ய பல options உள்ளது. Note Cards என்னும் சிறப்பு அமைப்பின் மூலம் எழுத்தாளரின் திரையை இரண்டாக split செய்து எழுதும் வேகத்தை கூட்டுகிறது. இதில் drag and drop அமைப்பு இருக்கிறது, இதன்மூலம் எளிதாக ஒரு பத்தியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடியும். Squibler இல் எழுதிய புத்தகத்தை தொகுப்பாளருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.அம்சங்கள்,

  • Drag and Drop
  • Content Management
  • Notecards

4. Evernote Web

இதுதான் சிறந்த Free Writing App, அனைத்துவிதமான எழுத்தாளர்களுக்கும் பயன்படக்கூடிய ஒன்று. அதன் interface அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக அமைந்துள்ளது. மேலும், இதில் இருக்கும் மற்ற பயனர்களுடன் சேர்ந்து எழுதுதல், அரட்டை அடித்தல் போன்ற options இருக்கிறது. ஆனால் இவையனைத்தும் இலவச சேவையில் வராது. இதன் அம்சங்கள்,

  • Wide variety writing templates
  • Colloborate with others (paid)
  • Chat box (paid)
  • Content categorizing

5. Microsoft Word

யாருக்குத்தான் தெரியாது MS Word பற்றி? Windows OS பயன்படுத்தும் அனைவரும் கண்டிப்பா ஒருமுறையாவது இதை திறந்து இருப்பார்கள். என்னதான் புது புது அம்சங்கள் உடன் பல writing apps வந்தாலும், MS word இன்றும் பயனில் உள்ளது. பல sections, பல settings, எழுதும் style என எல்லாமே இருக்கும். பயன்படுத்த எளிதாகவே இருக்கும். இதன் சிறப்பு,

MSword
  • Easy Format and Font adjustments
  • Image, Clip, Table insert
  • Find and Replace
  • Add headers and footers

Related Posts